வழிகாட்டுதல்கள்

சிறந்த ஊடகக் கலாசாரமொன்றினை நாட்டினுள் உருவாக்கும் நோக்கில் ஊடகவியலாளர்கள் ஆற்றுகின்ற பணிகள் மற்றும் அவர்களின் தரமான பங்களிப்பினை கௌரவிப்பதற்காக வேண்டி ஜனாதிபதி ஊடக விருது விழாவினை வருடாந்தம் நடாத்துவதற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதற்காக வேண்டி 2017ஆம் ஆண்டு அச்சு ஊடகம், இலத்திரணியல் ஊடகம் மற்றும் இணையத் தளங்களினூடாக பிரசுரிக்கப்பட்ட/ஒளிபரப்பான தங்களது நிர்மாணங்களை முன்வைக்குமாறு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும்/ஊடக நிறுவனங்களுக்கும் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இதன் மூலம் அழைப்பு விடுக்கின்றோம்.

நிர்மாணங்களை முன்வைக்கின்ற விதம்

ஜனாதிபதி ஊடக விருது விழா தேசிய ரீதியில் வெகுசன ஊடக நிர்மாணங்களை கௌரவிப்பதற்காக வேண்டி நடாத்தப்படுவதனால் அதற்காக வேண்டி தகுந்த நிர்மாணங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் முன் வைக்க முடியும்.

வரையரைகள்

 1. இந்த விருதுகளுக்காக வேண்டி 01.01ஆந் திகதி முதல் 2017.12.31ஆந் திகதி வரை பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்களில் முதற் தடவையாக பிரசுரிக்கப்பட்ட /ஒளிபரப்பப்பட்ட நிர்மணாங்கள் கவனத்திற் கொள்ளப்படும். மீள் ஒளிரப்புச் செய்யப்பட்ட நிர்மாணங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

 2. இந்தவிருதுகளுக்காகவேண்டிஉள்நாட்டுஊடகங்களில்பிரசுரிக்கப்பட்ட/ஒளிபரப்பப்பட்ட நிர்மாணங்கள் மாத்திரமே முன்வைக்கப்பட முடியும்.

 3. விருதுக்காக வேண்டி முன்வைக்கப்படுகின்ற நிர்மாணங்கள் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும் என்பதுடன், இயன்ற வரை அந்த நிர்மாணம் நிறுவனத் தலைவரினூடாக முன் வைக்கப்படல் வேண்டும். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் சுயாதீனமாக தங்களது நிர்மாணம் என்பதை தாமாகவே உறுதிப் படுத்தி முன்கை;க முடியும்.

 4. முன்வைக்கப்படுகின்ற நிர்மாணத்தின் மொழி மற்றும் ஊடகத் துறையினை விண்ணப்பப் படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

 5. ஒரு விண்ணப்பதாரிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விருதுத் துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், ஒரு விருதிற்காக வேண்டி ஆகக் குறைந்தது மூன்று நிர்மாணங்கள் மாத்திரமே முன்வைக்க முடியும். என்றாலும், ஒரு நிர்மாணத்திற்கு ஒரு விண்ணப்பம் என்றவாறு வௌ;வேறாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 6. நிர்மாணங்களை முன்வைக்கின்ற போது உரிய பத்திரிகையில்/அலைவரிசையில்/இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட/ஒளிபரப்பப்பட்ட நிர்மாணங்கள், நிறுவனத் தலைவர்க்கு அல்லது ஆசிரியர்க்கு நிர்மாணத்தின் உரிமையாளருக்காக வேண்டி முன் வைக்க முடியும்.

 7. (அ) பத்திரிகை ஊடகத்திற்கு உரித்தான நிர்மாணங்கள் முன்வைக்கின்ற போது உரியவாறு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், முதல் நிர்மாணம் அல்லது முதல் நிர்மாணத்தினை உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று முன் வைக்கப்பட வேண்டும்.

  (ஆ) வானொலி ஊடகத்திற்கு உரித்தான நிர்மாணங்கள் முன்வைக்கின்ற போது நிர்மாணங்கள் உரியவாறு முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் DVD Playble  ஊடகத்தினூடாக முன்வைக்கப்பட வேண்டும்.

   (இ) தொலைக்காட்சி ஊடகத்திற்கு உரித்தான நிர்மாணங்கள் உரியவாறு முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன்,  DVD Playble ஊடகத்தினூடாக முன்வைக்கப்பட வேண்டும்.  Data Formatஆக முன்வைக்கப்படுகின்ற நிர்மாணங்கள் நிராகரிக்கப்படும்.

   (ஈ) இணையத்தள ஊடகத்திற்கான நிர்மணாங்கள் உரியவாறு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றுப்படுத்தப்பட்ட அச்சுப் பிரதியுடன் முன்வைக்கப்பட்டதன் பிற்பாடு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் பிரசுரிக்கப்பட்டுள்ள கூகுல் பத்திரத்தில் (Google sheet)  உங்களுக்குப் பொருத்தமான இடத்தில் Hyperlink தொடர்பினை குறிப்பிடுவது கட்டாயமாகும்.

   

 8. உங்களால் விண்ணப்பிக்கின்ற அனைத்துப் போட்டிப் பிரிவிற்குமாக விண்ணப்பங்கள் மற்றும் CD/DVD/நிழற்படப்பிரதிகள்கடிதஉரையில்இட்டுகடிதஉரையின்இடதுபக்கமேல்மூலையில்ஜனாதிபதிஊடகவிருதுவிழா - 2018 மற்றும் போட்டி இலக்கம் (விபர அறிக்கைப் படிவத்தில் உள்ளவாறு) குறிப்பிட்டு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க முடியும். தபால் மூலம் அனுப்பி வைக்க முடியாது நிர்மாணங்கள் நேரடியாக வந்து ஒப்படைக்கலாம்.  மேற்சொன்ன (07) (அ), (ஆ), (இ) மற்றும் (ஈ) விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வது வார நாட்களில் மு.ப. 00 முதல் பி.ப. 3.00 மணிவரை மாத்திரம் என்பதுடன், நிர்மாணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி 2018 ஆகஸ்ட் 31 பி.ப 4.00 மணிவரை ஆகும்.

 9. உரியவாறு பூரணப்படுத்தப்படாத விண்ணப்பப் படிவம் கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது. விபர அறிக்கைப் பத்திரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை pma.gov.lk / www.media.gov.lkஎன்றஇணையத்தளத்தினூடாகபதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  போட்டிப் பிரிவிற்காக வேண்டி முன்வைக்கப்படுகின்ற நிர்மாணங்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மீளளிக்கப்பட மாட்டாது.

நிர்மாணங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி

மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்)

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு

இலக்கம் 163

கிருளப்பனை மாவத்தை

பொல்ஹேன்கொடை

கொழும்பு 05

 

(மேலதிகத் தகவல்களுக்காக வேண்டி பணிப்பாளர் (அபிவிருத்தி) 011-2513644, உதவிச் செயலாளர் (அபிவிருத்தி) 011-2513451  அல்லது 011-2513737 ஊடாக அபிவிருத்திப் பிரிவினை அழையுங்கள்)

  

கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க

செயலாளர்

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு

ministry-name-white2.png

Follow Us

Copyright © Presidential Media Awards 2019. All Rights Reserved.

Search